எம்.ஜி.ஆர் நடிப்பில் பா.நீலகண்டன் இயக்கிய முதல் படம், ‘சக்கரவர்த்தித் திருமகள்’. இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 17 படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் கடைசிப் படம், ‘நீதிக்குத் தலைவணங்கு’.
தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவல் பாதிப்பில் தெலுங்கு நடிகர் எம்.பாலையா, ‘நேரமு சிக்‌ஷா’ என்ற பெயரில் எழுதிய கதை இது. கே.விஸ்வநாத் இயக்கத்தில், கிருஷ்ணா, பாரதி, எம்.பாலையா என பலர் நடித்த இந்த தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதைத் தமிழில் ரீமேக் செய்தார்கள். அதுதான் ‘நீதிக்குத் தலைவணங்கு’.