சென்னை: நீதிபதி குறித்து அவதூறு, பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. 5 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரோபோஜி ராஜான் போதை பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்கில் சம்பந்தபட்டுள்ளதால் அவரை வழக்கறிஞராக பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பால சுப்பிரமணியம், சமூக வலைதளத்தில் சார் பதிவாளர் குறித்து அவதூறு பரப்பியதாக அவரை வழக்கறிஞராக பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம், நெல்லை மாவட்ட வழக்கறிஞர் அசோக்குமார், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நாகை பாவட்ட வழக்கறிஞர் ஜெய விஜயகமலன் ஆகிய 3 பேரும் வழக்கறிஞராக பணி செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post நீதிபதி குறித்து அவதூறு, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 5 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் : தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் அறிவிப்பு appeared first on Dinakaran.