‘சிக்கனம் என்பது வீட்டைக் காக்கும்; சேமிப்பு என்பது நாட்டைக் காக்கும்’ – இந்தப் பழமொழிக்கு ஏற்ப நீர் மேலாண்மை என்பது முதலில் வீட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும். குளிக்க, துவைக்க, சுத்தம் செய்ய போன்றவற்றுக்கு அளவான நீரைப் பயன்படுத்துவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மழை நீரைச் சேமிக்கலாம். ஒரு முறைப் பயன்படுத்தப் பட்ட நீரை மறுசுழற்சி செய்து பயன் படுத்தலாம். உதாரணமாக, வீட்டில் காய்கறிகள், பழங்கள் சுத்தம் செய்த நீரை, செடிகளுக்கு ஊற்றலாம். இது தனி மனித அளவில் கடைப் பிடிக்க வேண்டிய நீர் மேலாண்மை நடவடிக்கைகள்.