கூடலூர்: பிப்ரவரி மாதம் காலாவதியான பாரம்பரிய ஈட்டி மரங்களை பாதுகாக்க, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன. தனியார் நிலத்திலிருந்தாலும் இந்த மரங்களை வெட்டத் தடைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.