ரோம்: இரு நுரையீரல்களிலும் நிமோனியா ெதாற்று இருப்பது கண்டறியப்பட்டதால், போப் பிரான்சிஸின் உடல்நிலை மேலும் சிக்கலாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறல் காரணமாக கடந்த வாரம் ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் (88) அனுமதிக்கப்பட்டார். மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு ஏற்பட்டிருப்பது சிறிய தொற்று என்றும், இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் முடிவில், போப்பின் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக போப்பின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போப் அட்மிட் செய்யப்பட்டிருப்பதால், அவர் பங்கேற்கும் சனிக்கிழமை நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தொழுகையில் மூத்த கார்டினல் ஒருவர் போப்புக்குப் பதிலாக பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் கடந்த 2013ம் ஆண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளால் அவர் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்க்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.