மூணாறு : நெடுங்கண்டத்தில் பிரசவத்தின் போது டாக்டர், குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் பகுதியை சேர்ந்தவர் வீரகிஷோர். இவரது மனைவி விஜயலட்சுமி(29). இருவரும் மருத்துவர்கள் ஆவர். நிறைமாத கர்ப்பிணியான விஜயலட்சுமி திங்கள்கிழமை மாலையில் பிரசவத்திற்காக நெடுங்கண்டம் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை மாலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது. பின்னர் இரவு 9 மணியளவில் விஜயலட்சுமியின் உடல்நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து, வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் விஜயலட்சுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இவரது மரணத்திற்குக் காரணம் பிரசவத்திற்கு பின் உடலில் உட்புற ரத்தப்போக்கு என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நெடுங்கண்டம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனைவி மற்றும் குழந்தையின் இறப்பு வீரகிஷோரின் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post நெடுங்கண்டத்தில் சோகம் பிரசவத்தில் தாய், குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.