மதுரை: நெல்லை ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கை சிபிஐக்கு மற்றக் கோரிய வழக்கில் தமிழக டிஜிபி, சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது மைதீன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு : நெல்லையில் சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளருமான ஜாகிர் உசேன் பிஜிலி கடந்த 18-ம் தேதி நெல்லை கொலை செய்யப்பட்டார். வக்போர்டுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்ததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜாகிர் ஹுசைன் பிஜிலி அவரது முகநூல் பக்கத்தில் முன்னதாகவே வீடியோ வெளியிட்டுள்ளார்.