திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், குற்றாலம் அருவிகளில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பரவலாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 79 மி.மீ. மழை பதிவானது.