கோவை: நெல்லை எஸ்ஐ கொலை வழக்கில் கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லையில் கடந்த 18ம் தேதி ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் பிஜிலி (60), கொலை செய்யப்பட்டார். வக்ப் நிலப்பிரச்சினை தொடர்பாக நடந்த இந்த கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய நபரான தௌபீக் (என்ற) கிருஷ்ணமூர்த்தியை துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை டவுன் சரக முன்னாள் போலீஸ் உதவி கமிஷனரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனருமான செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post நெல்லை மாஜி எஸ்ஐ கொலை வழக்கு உதவி கமிஷனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.