பல்ராம்பூர்: நேபாளத்தில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ, சீதாபூர், ஹர்டோய் மற்றும் பராபங்கி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் நேபாளத்தின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமான போகாராவுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
நேபாளத்தின் தாங் மாவட்டம் சிசாபானி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்த ஒரு சுவரில் வேகமாக மோதி நின்றது. இதில் இந்திய சுற்றுலா பயணிகள் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post நேபாள பஸ் விபத்தில் 25 இந்தியர்கள் காயம் : 3 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.