இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் இருந்து பிரதமர் நேரு தேசியக் கொடியேற்றி, சுதந்திர தின உரையாற்றுவது வழக்கம். குறிப்பாக 1947 மற்றும் 1948-ம் ஆண்டுகளில் வானொலியில் தான் பிரதமர் உரையாற்றினார். 1949-ம் ஆண்டுக்குப் பிறகுதான் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் உரையாற்றும் நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.
ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் நேரு ஆற்றும் உரை இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அவரது சுதந்திர தின உரைகளை சுருக்கமாகப் பார்ப்போம்…