புதுடெல்லி: “நேரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும்.” என டெல்லியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை), டெல்லியில் உள்ள ஆர்.கே. புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தப் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.