சென்னை: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக். 29-ம் தேதி பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் துறை சார்பில், பக்கவாத நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தலைமையில் நடந்த பேரணியில் நரம்பியல் சிகிச்சை பிரிவு துறை தலைவர் ஆர்.எம்.பூபதி உட்பட மருத்துவர்கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர். பின்னர், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் நரம்பியல் சிகிச்சைத் துறை தலைவர் மருத்துவர் ஆர்.எம்.பூபதி பேசியதாவது: மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுதல், ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தப்போக்கு உருவாகுதல், இதயம் சரியாக வேலை செய்யாமை மற்றும் மூளையிலிருந்து கெட்ட ரத்தம் அடைபட்டு போதல் உள்ளிட்ட காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.