திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜீயபுரம் டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வரிசையில் சென்ற பக்தர்கள் மத்தியில் ஒரு பக்தர் திடீரென இடையில் புகுந்து செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜீயபுரம் டிஎஸ்பி பழனி அவரை ‘‘ஒழுங்கா வாடா’’, ’’ஒழுக்கமா நடந்துக்கடா” ‘‘செருப்பால அடிப்பேன்’’ போன்ற வார்த்தைகளால் ஒருமையில் திட்டி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம், டிஎஸ்பி பழனிக்கு மெமோ கொடுத்துள்ளார்.
The post பக்தரை ஆவேசமாக திட்டிய திருச்சி டிஎஸ்பிக்கு “மெமோ’’ appeared first on Dinakaran.