அரியலூர்: காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கம் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த காரைக்குறிச்சியில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இது 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ேகாயிலாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதத்தில் 20ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.
இந்த கோயிலில் ஏப்ரல், ஆகஸ்ட் மாதத்தில் சூரியபகவான் வலம் வந்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி இன்று (20ம் தேதி) காலை 6.10 மணி முதல் 6.20 மணி வரை கருவறையில் உள்ள லிங்கம் மீது சூரிய ஒளி பிரதிபலித்தது. காலை 6 மணி முதலே அதிகளவிலான பக்தர்கள் திரண்டு லிங்கத்தை சூரியன் வழிபடும் நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.
The post பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கம் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு appeared first on Dinakaran.