சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று சட்டமன்றத்திற்கு வேளாண்மை துறை அமைச்சர் உள்பட திமுக உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி, பாமக எம்எல்ஏக்கள் தோளில் பச்சை துண்டு அணிந்து பேரவைக்கு வந்தனர். முன்னதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று காலை 8 மணிக்கு கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை காமராஜர் சாலை கடற்கரை பகுதியில் உள்ள அண்ணா, கலைஞர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, சட்டப்பேரவைக்கு சென்று காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
The post பச்சை துண்டுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.