லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள அடல்பிகாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. லக்னோ அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்ற நிலையில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வி கண்ட லக்னோ, 2-வது ஆட்டத்தில் வலுவான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியைத் தோற்கடித்தது.