சென்னை: தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் கார்த்தி. தற்போது, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. சர்தார் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மைசூரில் நடந்த படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் விபத்து ஏற்பட்டு கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு வீக்கம் அடைந்துள்ளது. இதனால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீக்கம் ஏற்பட்டதால் உடனடியாக கார்த்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரை ஒரு வார காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அவர் ஓய்விற்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
The post படப்பிடிப்பில் விபத்து: நடிகர் கார்த்தி காயம் appeared first on Dinakaran.