சென்னை:“போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வரும் பட்ஜெட் தொடரில் பேசி முடிக்க வேண்டும்” என, கோட்டை நோக்கி பேரணி சென்ற தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் சென்னை, பல்லவன் சாலையில் இன்று (மார்ச் 6) கோட்டை நோக்கி பேரணி நடைபெற்றது.