நீலகிரி: நீலகிரியில் ரூ.130.35 கோடியில் 56 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.494.51 கோடி மதிப்பில் முடிவுற்ற 1,703 திட்டப் பணிகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். உதகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்; “மலையின் அரசியான உதகைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொளுத்தும் கோடைவெப்பத்துக்கு ஒரு இளைப்பாறலாக அரசு விழாவில் கலந்துகொள்கிறேன். நீலகிரி வளர்ச்சிக்கு அடித்தளம் திமுக ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு இந்த மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் செய்துகொடுத்துள்ளோம். உள்ளாட்சி துறை அமைச்சராக நான் இருந்தபோது உதகைக்கு 3-வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். நீலகிரி தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை கேட்டு வாங்கிவிடுவார். பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம்: உதகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரை appeared first on Dinakaran.