தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பதிவான குற்றங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன. சில தென்னிந்திய மாநிலங்களில் இவை ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன. இந்த வழக்குகளிலும் தண்டனை விகிதமும் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளதாகவும் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

