சென்னை: கடலூர் மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை உள்ள இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். கெடிலம் ஆற்றில் ரூ.36 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வெலிங்டன் எதிரில் கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். தென்பெண்ணை ஆற்றில் ரூ.58 கோடியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
The post பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.