வாஷிங்டன்: அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலேயே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புலம் பெயர்ந்தோரை கையாள மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்தை தொடங்குவதாக கூறினார். இது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. டிரம்பின் நிலைப்பாட்டை எதிர்த்து வாஷிங்டனில் மக்கள் மக்கள் அணிவகுப்பு என்ற பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.
டிரம்பின் குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பதாகைகளுடன் பேரணி நடத்தினர். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேற்று வாசிகள், பிறப்புரிமை, குடியுரிமை போன்றவற்றின் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மெக்சிகோவில் டொனால்ட் டிரம்பின் குடியேற்று நடவடிக்கைக்கு எதிராக எல்லை வெளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிலிப்பைன்ஸில் அமெரிக்க ராணுவத்தை விரிவுப்படுத்துவதை கண்டித்து மணிலாவில் போராட்டங்கள் நடைபெற்றன. பெல்ஜியத்தில் தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், பெண்ணியவாதிகள் மற்றும் இனவெறி எதிர்ப்பு ஆர்வலர்கள் டிரம்பின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். டிரம்ப் அமெரிக்க கோடீஸ்வரர்களுக்கு சேவை செய்யும் தீவிர வலதுசாரி என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
The post பதவியேற்பு நாளில் டிரம்பிற்கு எதிராக உலகமெங்கும் போராட்டம்: நாடு கட்டத்தை எதிர்த்து வாஷிங்டனில் மக்கள் அணிவகுப்பு appeared first on Dinakaran.