சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்கம் பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் டி.மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2024ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் தமிழ்நாட்டில் பதவி உயர்வில் கடைபிடிக்கப்பட்டு வந்த 200 புள்ளி ரோஸ்டர் முறையை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏற்கனவே 2003ல் இருந்து அளிக்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்து மறு நிர்ணயம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசு அரசமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்தது. அச்சட்டப்பிரிவு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் அந்தந்த மாநில அரசுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு விகிதாசாரத்திற்கு ஏற்ப சட்டமன்றத்தில் சட்டமியற்றி நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என கூறியது. எனவே தமிழ்நாட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசமைப்பு சட்டம் 16 (4ஏ)வை நடைமுறைப்படுத்திட வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றிட வேண்டும்.
The post பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பேரவை கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற வேண்டும்: எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.