சென்னை: பதிவுத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வருவாய் ஈட்டுவதில் முக்கிய துறையாக விளங்குவது பதிவுத் துறை. இந்நிலையில், இத்துறையின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.