பந்தலூர்: பந்தலூரில் அரிசிக்காக வீடுகளை இடித்து வந்த ‘புல்லட்’யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் யானை நீலகிரி மாவட்டம் பந்தலூர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை இடித்து வந்தது. யானையை நிரந்தரமாக அடர் வனத்துக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இதனால், வனத்துறையினர் யானையை விரட்ட தனிக்குழு அமைத்து, கண்காணித்து வந்தனர். அப்படியிருந்தும் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு சென்றது.