சென்னை: உலகத் தாய்மொழித் திருநாள்; பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம் என கவிஞர் வைரமுத்து எக்ஸ்தள பதிவிட்டுள்ளார். தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஒருவன் கற்கக்கூடிய
மொழிகளின் எண்ணிக்கை
எண்ணில் அடங்காது
ஆனால்,
தாய்மொழி என்பது
ஒன்றே ஒன்றுதான்.
அதுவும்
அமைக்கப்பட்டதல்ல;
உன் பிறப்பிலேயே
அமைந்தது
உன் மூளை
வார்க்கப்பட்டதும்
அறிவு வளைக்கப்பட்டதும்
தாய்மொழிக்குத்தான்
தாய்மொழிதான்
அறிவை ஏந்திவரும்
இலகு ஊடகம்
தாய்மொழியில் மட்டுமே
பயிற்சி உள்ளவர்கள்தாம்
உலகத்தின்
அழியாத இலக்கியங்களைப்
படைத்திருக்கிறார்கள்
பன்மொழி என்பது
பக்கபலம்;
தாய்மொழியே தக்கபலம்
உங்கள் தாய்மொழி வளர்க;
எங்கள் தாய்மொழி
தமிழ் வாழ்க!
The post பன்மொழி என்பது பக்கபலம்; தாய்மொழியே தக்கபலம்: உலகத் தாய்மொழித் திருநாளை முன்னிட்டு வைரமுத்து எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.