ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இதில், ‘பிக் பாஸ்’ ராஜு கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார். இந்தப்படத்துக்காக விஜய் சேதுபதி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ‘ஏதோ பேசத்தானே… என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே…’ என்ற இந்தப் பாடலை நடிகர் சித்தார்த்தும் ஷில்பா ராவும் பாடியுள்ளனர்.