நெல்லை: பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர் ஒருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அரைமயக்கத்தில் கற்பனையிலேயே பப்ஜி விளையாட்டை விளையாடியதை பார்த்த அவரது பெற்றோர் மனவேதனை அடைந்தனர்.
பப்ஜி அடிமை! ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கைகளை துப்பாக்கியாக்கி விளையாடிய சிறுவன்! பெற்றோர் கண்ணீர் கடந்த சில ஆண்டுகளாக செல்போன்கள் நவீனமயமாகி வரும் நிலையில் அதற்கேற்ப பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. ப்ளூவேல் கேம், ப்ரீ பயர் கேம், பப்ஜி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பலர் விளையாடி வருகிறார்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஆர்வமாகவே விளையாடி வருகிறார்கள்.
‘பப்ஜி’ விளையாடியதை கண்டித்ததால்.. தாய் உள்பட மொத்த குடும்பத்தையே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்! 2 ஆண்டுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக விளையாடி வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடல், பணியிடங்களுக்கு விடுமுறை உள்ளிட்டவைகளால் மக்களின் கேம் விளையாடும் ஆர்வம் அதிகரித்தது. இவை எல்லாம் மிகவும் ஆபத்தான கேம்களாகவே உள்ளன. உயிர் குடிக்கும் எமன் பலரது உயிர்களை குடிக்கும் எமன்களாக மாறி வருகின்றன.
இது உளவியலுடன் தொடர்புடையது. மேலும் ப்ளூ வேல், பப்ஜியில் உன் கழுத்தை நீயே அறுத்துக் கொள் என்றால், அதை விளையாடுபவர்களும் செய்து உயிரை மாய்த்து கொள்கிறார்கள். இந்த விளையாட்டை விளையாடும் நபர்களுக்கு மிரட்டலும் வருகிறது. கேமை விட முடியவில்லை அதனால் அவர்களால் இந்த கேமை விட்டு பாதியில் போக முடியவில்லை. எப்போதும் கூட்டமாக இந்த கேமை விளையாடுகிறார்கள். அப்போது “அவனை சுடு, விடாதே, பிடி, அடித்து நொறுக்கு, தாக்கி போடு, அடிச்சி தூக்கு” என இவர்களுக்குள்ளாகவே கமென்ட்ரி கொடுத்து விளையாடுகிறார்கள். பாதிப்பு இதனால் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் சொந்த வேலைகளையும் படிப்பையும் விட்டுவிட்டு சதா சர்வகாலமும் பப்ஜி விளையாட்டிலேயே ஐக்கியமாகிவிடுகிறார்கள். இதனால் இவர்கள் உடலளவிலும் மனதளவிலும் கஷ்டப்படுகிறார்கள்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. திருநெல்வேலியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவமனை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். என்னவென விசாரித்ததில் பப்ஜி ப்ரீ பயர் கேம் விளையாடி அதற்கு அடிமையாகி எப்போது பார்த்தாலும் அந்த கேம் விளையாடுவது போலவே செய்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுவனை ஸ்டெரெச்சரில் படுக்க வைத்த போது துப்பாக்கியால் சுடுவது போல் செய்கையையும் போனில் இரு விரல்களையும் கன்ட்ரோல் செய்வது போன்றும் ஏதோ பட்டனை தட்டுவதும் போன்று வெறும் கைகளாலேயே விளையாடி கொண்டிருந்தார். இதனால்தான் பெற்றோர் ஆரம்ப காலத்திலேயே கண்டித்து வையுங்கள் என மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள்.