திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ருத்திரகோட்டி (51). இவர் தனது நிலத்தில் உள்ள பம்பு செட்டுகள் மழையில் நனைந்து பழுதடைந்துவிடாமல் இருப்பதற்காக கோணிப்பை போட்டு மூடி வைத்திருந்தார். கடந்த 3 மாதத்துக்கு பிறகு நேற்று வேர்க்கடலை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி, பம்பு செட்டை மூடிவைத்திருந்த கோணியை அவிழ்த்தபோது மோட்டார் பைப் உள்ளே அணில் குட்டிகள் இருப்பதை பார்த்தார்.
தண்ணீர் பாய்ச்சால் அதற்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய விவசாயி, பைப் உடைந்தாலும் பரவாயில்லை என்று கருதி மோட்டார் பைப்பை இரண்டாக அறுத்து எடுத்து அதன் உள்ளே இருந்த அணில் குட்டிகளை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்து அந்த பகுதியில் உள்ள புதரில் பத்திரமாக கூடுடன் வைத்ததுடன் அதனருகே விவசாயி மணிக்கணக்கில் காத்திருந்தார். பின்னர் அணில் வந்ததும் அந்த குஞ்சுகளை விட்டுவிட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் வாட்ஸ்அப், பேஸ் புக் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post பம்ப் செட் மோட்டார் பைப்பை அறுத்து அணில் குட்டிகளை தாயிடம் சேர்த்த மனிதநேயமிக்க கல்பாக்கம் விவசாயி appeared first on Dinakaran.