
பிரபல இந்தி நடிகர் விக்கி கவுஷல் புராணக் கதையில் நடிக்கிறார். விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமரின் கதை திரைப் படமாகிறது. இப்படத்துக்கு ‘மகாவதார்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘ஸ்திரீ 2’ படத்தை இயக்கிய அமர் கவுஷிக் இயக்குகிறார். இதன் ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இதில் விபிஎக்ஸ் பணிகளுக்கு மட்டும் 6 மாதம் செலவழிக்க இருக்கிறார்கள்.

