சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்துவது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத் திறனாளிகள் சென்னையில் புதன்கிழமை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வை மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும்; வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்கள் இலவசமாக கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.