நியூயார்க்: இறக்குமதி வரிகளின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும் என்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜெய்சங்கர், "உலகம் பன்முகத்தன்மை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமான மாற்றத்துக்கான வலுவான குரலாக உள்ளன.