புதுடெல்லி: ‘‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சக்தி வாய்ந்தவராக இருந்தார் என நினைத்தேன். ஆனால், அவர் பலவீனமாக இருந்ததை எனது ஆய்வில் கண்டறிந்தேன்’’ என பாஜக எம்.பி.யும், எமர்ஜென்சி திரைப்படத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. கடந்த 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்தப்பட்ட 21 மாத அவசரநிலை பற்றி இந்த படம் தெரிவிக்கிறது. இது வரும் 17-ம் தேதி வெளியாகிறது. இதில் நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இவர் தலைவி திரைப்படத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாகவும் நடித்தவர். இவர் ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ திரைப்படத்தில் ஜான்சி ராணியாகவும் நடித்தவர்.