
சென்னை: பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? என்றும் உதவித்தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

