காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிராம உதவியாளர் சங்கத்தினர், 150க்கும் மேற்பட்டோர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் சப் – கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்க மாநில அறிவுரையின்படி, கடந்த வாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நடத்தினர். அதனைத் தொடர்ந்து, நேற்று காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கோட்ட அலுவலகம் முன்பு 4 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில், மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் செயலாளர் உதயகுமார் தலைமையில் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்கிடுதல், பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வேலை வழங்கிடுதல், அரசாணை எண் 33 திருத்திடுதல், கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பணி வழங்குதல், கிராம உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் வாயிலில் வரும் 13ம் தேதி போராட்ட நடத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சபீர், காஞ்சிபுரம் வட்ட தலைவர் பாலாஜி, உத்திரமேரூர் வட்டத் தலைவர் திருவேங்கடம், வாலாஜாபாத் வட்டத் தலைவர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள், கிராம உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.