ராமநாதபுரம் : பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் அலங்கார விளக்கு பலகை அகற்றப்பட்டது குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது. தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பள்ளிவாசல் அலங்கார விளக்கு – காவல் துறை விளக்கம் appeared first on Dinakaran.