சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது (மமக) பேசுகையில் “மணப்பாறையிலிருந்து மாலை நேரத்தில் பேருந்து இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் இயக்கப்படுமா” என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “காலை நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்கப்படுவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பேருந்துகளை இயக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பேருந்துகளை இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்: சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு appeared first on Dinakaran.