மதுரை: பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த டி.செந்தில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “தமிழகத்தில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், குடிமகன்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகளை தெரிந்தகொள்ளும் வகையிலும் பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண்களை குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.