சென்னை: பழநியில் கடந்தாண்டு நடை பெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான சிறப்பு மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் பங்கேற்றனர்.