
சென்னை: தங்கம், வெள்ளி விலை இன்று (அக்.18) சற்றே குறைந்துள்ளது. இது பண்டிகையை ஒட்டி நகை வாங்குவோருக்கு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கு, பவுனுக்கு ரூ.2000 குறைந்து ஒரு பவுன் ரூ.95,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் ரூ.190-க்கு விற்பனையாகிறது.

