ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் மூன்று பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரில் பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.