ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் தங்கள் மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை, குஜராத் மாநிலம், அகமதாபாத் மற்றும் சூரத்தில், வங்கதேசத்தினர் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளூர் காவல்துறையினரால் பிடித்து வைக்கப்பட்டனர். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.