ஜெய்ப்பூர்: "நாட்டின் பெருமை பாதிப்புக்குள்ளானபோது நீங்கள் பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் துரதிருஷ்டமானது" என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார். காஷ்மீரில் 26 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவதிக்க நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி தவிர்த்தாக கார்கே இவ்வாறு விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ‘அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்’ என்ற பேரணியில் கலந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நாட்டின் பெருமை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நீங்கள் (பிரதமர் மோடி) பிஹாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது நாட்டிக்கு மிகவும் துரதிருஷ்டமானது.