இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவாகி உள்ளது.
தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 2:04 மணிக்கு 102 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. கைபர் பக்துன்க்வாவின் பெஷாவர், ஸ்வாட், மலாகண்ட், நவ்ஷேரா, சர்சத்தா, கரக், திர், மர்தான், முகமது, ஷாங்க்லா, ஹங்கு, ஸ்வாபி, ஹரிபூர் மற்றும் அபோட்டாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.