பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரத்தை அம்மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்வா மாகாண கல்வித் துறை, அம்மாகாணத்தின் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அம்மாகாணத்தின் அடிப்படைக் கல்வியின் நிலை குறித்த பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், "கைபர் பக்துன்வாவில் 49.20 லட்சம் குழந்தைகள் அதாவது, 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.