இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள மூன்று விமான தளங்களை ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வானூர்தி ஆணையம் இன்று மாலை 4 மணி வரை தாக்குதலுக்கு உள்ளான விமான தளங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாக எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தரப்பு, இந்திய பகுதிகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மே 15 வரை இந்த விமான நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நகரங்களுக்கான விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.