இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரியை இந்தியா நேற்று முன்தினம் வெளியேற்றியது. பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் தனது அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதற்காகவும், அவர் உளவு பார்த்ததில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிகாரி வெளியேறுவதற்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும். இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கையை தொடர்ந்து பதிலடி தரும் வகையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஒரு இந்திய ஊழியரை பாகிஸ்தான் வெளியேற்றியது. சம்பந்தப்பட்ட அதிகாரி 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
The post பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம் appeared first on Dinakaran.