புதுடெல்லி: பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தியா மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், சர்வதேச மட்டத்தில் அதை எடுத்துச் செல்வதாகவும் நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பாஜக எம்பி அருண்குமார் சாகர் மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "உறுப்பினர் வெளிப்படுத்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அவரது கேள்வியில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை இந்தியா கண்காணிக்கிறதா என்பது. இரண்டாவதாக, சர்வதேச அளவில் இதைப் பற்றி நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றியது.