புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர், இது காஷ்மீரின் சுற்றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. அதன்பின் காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது.
இதனால் பெரும்பாலான உணவு மற்றும் தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் படகு வீடுகள் காலியாகிவிட்டன. அனைத்து வகை தங்கும் விடுதிகளில் சுமார் 12 லட்சம் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.